புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இங்கு பாகிஸ்தானில் இருந்து வந்த தீவரவாதிகள் எல்லையை கடக்க முயன்றனர்.
அவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து தீவிரவாதிகள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஓடிவிட்டனர். இந்த சண்டையில் ராணுவத்தின் இளம் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார்.
இதன் மூலம் ஜி20 மாநாட்டை சீர்குலைக்க, பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட மற்றொரு முயற்சி தோல்வியடைந்துள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவ ட்ரோன் ஒன்றையும் பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.
அதன் மீது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியவுடன் ட்ரோன் திரும்பிச் சென்றது. எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே தீவிரவாதிகளை தேடும் பணி மிகப் பெரியளவில் நடைபெறுகிறது.