இனி மக்கள் விழித்து கொள்வார்கள் என நம்புகிறேன்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கர்நாடக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கர்நாடக மாநில வாக்காளர்களுக்கு என் அன்பான, உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டசபை தேர்தலில் மிகத் தெளிவான, ஆணித்தரமான தீர்ப்பைத் தந்த கர்நாடக மக்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டிருக்கிறது, நன்றி சொல்கிறது.

இதனை ஒரு மாநில சட்டசபை தேர்தலாக பார்க்கக் கூடாது. இந்திய அரசியல் சாசனத்தின் உயர்ந்த நோக்கங்களைக் காப்பாற்றி நிலைநாட்டிய பெரும் போரில் வெற்றியடைந்தோம் என்று பெருமைப்பட வேண்டும்.

வீர தீரத்துடன் போராடி வெற்றிக்கு பாடுபட்ட கர்நாடக காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகள். மேலும், இனி நாட்டு மக்கள் விழித்துக் கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அந்த பதிவில் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.