கர்நாடகா வெற்றி குறித்து ராகுல் காந்தி பேட்டி..!

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் காங்கிரஸ் கட்சி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறது.

இந்த நிலையில் கர்நாடகா தேர்தலில் காங்கிரசின் வெற்றி குறித்து மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பெரும் முதலாளிகளை எளிய மக்கள் வீழ்த்தியுள்ளனர். கர்நாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு, அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வெறுப்பரசியலை கையிலெடுக்காமல் அன்பின் அடிப்படையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. கர்நாடகா மக்களுக்கு நாங்கள் 5 வாக்குறுதிகளை கொடுத்திருந்தோம். முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

இந்த யுத்தத்தில் நாங்கள் வெறுப்பைக் கொண்டு சண்டையிடவில்லை. அன்பின் மூலம் சண்டையிட்டோம். இந்த தேசம் அன்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை கர்நாடக மக்கள் நிரூபித்துள்ளனர். மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நான் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

இந்தநிலையில் மைசூரு மாட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம் மகாராணி கல்லூரிக்கு முன்னாள் முதல்-மந்திரியும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. கட்சி பொய்யான வாக்குறுதிகள், ஊழல், 40 சதவீதம் கமிஷன், லஞ்சம், ஆகியவற்றால் தோல்வி அடைந்து உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா வந்தும் வெற்றி பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் கர்நாடகத்தில் நடத்திய ‘ரோடு ஷோ’வால் எந்த பலனும் இல்லை. அதனால்தான் பா.ஜனதா கட்சி தொகுதிகள் குறைந்துள்ளது. மேலும் பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் செய்த ஊழல் வழக்குகள், மதக் கலவரம், வன்முறை போன்றவைகளால் மாநில மக்கள் அவதி அடைந்து வந்தனர். அதனால்தான் இந்த தடவை பா.ஜ.க. விற்கு மக்கள் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

கர்நாடக மக்களுக்கு நல்லா தெரியும் இங்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா யாரு வந்து வாக்கு கேட்டாலும் வெற்றி பெற முடியாது. இதனை நாங்கள் முன்பே கூறியுள்ளோம். நாங்கள் 130-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நானும்(சித்தராமையா) டி.கே. சிவக்குமாரும் 130 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறினோம். அதைபோல் வெற்றி பெற்று உள்ளோம். வருணா தொகுதியில் என்னை வெற்றி பெற செய்ததற்கு மக்களுக்கும், 6 கோடி கர்நாடக மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.