கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

LIVE

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்.. இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

பெங்களூர்: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய பெங்களூரில் காாங்கிரஸ் கட்சியின் சார்பில் வென்ற 135 எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்றைய வாக்கு எண்ணிக்கை லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்

Newest First Oldest First
07:47 AM

பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை- பாஜக வெற்றி

07:33 AM

பெங்களூரு மண்டலத்தில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 13 தொகுதிகளையும் காங்கிரஸ் 13 தொகுதிகளையும் கைப்பற்றியது.

06:59 AM

லிங்காயத்துகள்:
காங்கிரஸ் 45
பாஜக- 20
மஜத-2
சுயேட்சை-1
கேஆர்பிபி-1
ஒக்கலிகா கவுடா:
காங்கிரஸ்- 27
மஜத-12
பாஜக-10
சுயேட்சை-1
எஸ்கேபி-1
எஸ்டி:
காங்கிரஸ்-14
மஜத-1
எஸ்சி (தலித்துகள்)
காங்கிரஸ் 22
பாஜக 12
மஜத-3
குருபா
காங்கிரஸ்- 8
பாஜக-3
முஸ்லிம்கள்
காங்கிரஸ் 9
பிராமணர்கள்
பாஜக- 6
காங்கிரஸ் 3
மஜத-1
மராத்தாக்கள்
காங்கிரஸ்-4
பாஜக-2

11:57 PM

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையொட்டி பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் வெற்றி விழா நடைபெற்றது. இதில் சித்தராமையா பேசும் போது, ”மக்களுக்கு 5 முக்கியமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். அந்த 5 வாக்குறுதிகளையும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே நிறைவேற்றுவோம். நாங்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மோடி கூறினார். 100 முறை மோடி கர்நாடகத்திற்கு வந்தாலும் பாரதிய ஜனதா வெற்றி பெறாது”என்றார்.

11:07 PM

அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்டவை: 223
பெரும்பான்மைக்கு தேவை- 113
காங்கிரஸ்- 135
பாஜக -65
மஜத- 19
மற்றவை -4

10:05 PM

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில், அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கர்நாடக ஆளுநர் கெலாட்டை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

09:08 PM

வரும் நடாளுமன்ற தேர்தலில் பெறும் வெற்றிதான் நமக்கு முக்கியம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார். மல்லிகார்ஜூன கார்கே மேலும் கூறுகையில், “வரும் நாடாளுமன்ற தேர்தல் மிகப்பெரிய யுத்தம், அதற்கு தயராக இருக்க வேண்டும்” என்றார்.

08:52 PM

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு புட்டசுவாமி கவுடா என்ற சுயேட்சை வேட்பாளர் ஆதரவு கொடுத்து இருப்பதாகவும் இதனால், தற்போது ஆதரவு 138 ஆக உயர்ந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

08:08 PM

காங்கிரஸ் MLA-க்களுக்கு தயாராக இருக்கும் சொகுசு விடுதி

08:00 PM

மோடியின் வியூகத்துக்கு மரண அடி – மணி, பத்திரிகையாளர்

07:59 PM

தேசத்திற்கு கொண்டாட்டத்தை பரிசளித்த கர்நாடக மக்களுக்கு வாழ்த்துகள் என்று வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் வெங்கடேசன் எம்.பி கூறுகையில், “ஜனநாயத்தின் எதிரிகள் ஜனநாயகத்தாலே வீழ்த்தப்படும் பொழுது அது கட்சிகளை கடந்து தேசமே கொண்டாடும் வெற்றியாக மாறுகிறது. தேசத்திற்கு கொண்டாட்டத்தை பரிசளித்த கர்நாடக மக்களுக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

07:48 PM

Karnataka அடுத்த முதல்வர் யார்?

Karnataka அடுத்த முதல்வர் யார்?

07:35 PM

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை அடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்காக கட்சியின் மேலிட தலைவர்கள் வருகை தர உள்ளனர். முதல்வர் பதவியேற்பு விழா அடுத்த வாரம் 17 அல்லது 18-ந் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

07:10 PM

அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்டவை: 213

பெரும்பான்மைக்கு தேவை- 113

காங்கிரஸ்- 130

பாஜக -60

மஜத- 19

மற்றவை -4

06:55 PM

கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்து அன்புமிக்க அரசியலை ஏற்றுக்கொண்டு இருப்பதாகவும் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

06:37 PM

மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசாமல் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல் முயற்சிகள் இனி பலனளிக்காது என்பதை கர்நாடகா தேர்தல் வெற்றி காட்டுகிறது. இமாசல பிரதேசம், கர்நாடாவில் இதை பார்த்தோம். தங்களின் பிரச்சினைகளை விவாதித்து அதற்கு தீர்வு காணப்பட் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா

06:28 PM

Annamalai பிரச்சாரம் கைகொடுக்கவில்லையா?

Annamalai பிரச்சாரம் கைகொடுக்கவில்லையா?

06:19 PM

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராகவும் கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சி.டி ரவி சிக்மகளூர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் தம்மையாவிடம் 5,926 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

06:10 PM

கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை; வெற்றி மற்றும் முன்னிலை நிலவரம்!

06:04 PM

Congress-ன் DK Shivakumar Breaks Down! Siddaramaiah-வின் Election Winning Speech

05:58 PM

பெரும்பான்மைக்கு தேவை- 113
காங்கிரஸ்- 123
பாஜக- 56
மஜத- 19

05:40 PM

“பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி!

நேருக்கு நேர்
விராஜ்பேட்டை
ஏ.எஸ்.பொன்னண்ணா
காங்கிரஸ்

கே ஜி போபையா
பாஜக

Vs

கர்நாடகா : விராஜ்பேட்டை தொகுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவின் கேஜி போபையாவை எதிர்த்து போட்டியிட்ட பொன்னண்ணா வெற்றி பெற்றுள்ளார்.

நேருக்கு நேர்
தீர்த்தஹள்ளி
அரக ஞானேந்திரா
பாஜக

கிம்மனே ரத்னாகர்
காங்கிரஸ்

Vs

கர்நாடகா : உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தீர்த்தஹள்ளி தொகுதியில் வெற்றி பெற்றார்.

நேருக்கு நேர்
திப்தூர்
கே ஷடாக்ஷரி
காங்கிரஸ்

பி சி நாகேஷ்
பாஜக

Vs

கர்நாடகா : கர்நாடக மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

நேருக்கு நேர்
சொராப்
எஸ்.மது பங்காரப்பா
காங்கிரஸ்

குமார் பங்காரப்பா
பாஜக

Vs

கர்நாடகா : கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர் எஸ் குமார பங்காரப்பாவை வீழ்த்தினார் காங்கிரஸ் வேட்பாளர் எஸ் மது பங்காரப்பா.

நேருக்கு நேர்
சிர்சி
பீமன்னா நாயக்
காங்கிரஸ்

விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி
பாஜக

Vs

கர்நாடகா : கர்நாடக சட்டசபை சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

நேருக்கு நேர்
சிரா
டி.பி. ஜெய சந்திரா
காங்கிரஸ்

டாக்டர் ராஜேஷ் கவுடா
பாஜக

Vs

கர்நாடகா : காங்கிரஸ் வேட்பாளர் டி.பி. ஜெய சந்திரா, சிரா தொகுதியில் வெற்றி பெற்றார்.

05:31 PM

கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்

நேருக்கு நேர்
சிவாஜிநகர்
ரிஸ்வான் அர்ஷாத்
காங்கிரஸ்

என் சந்துரு
பாஜக

Vs

கர்நாடகா : சிவாஜிநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத் வெற்றி பெற்றார்.

READ MORE


Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.