Today Headlines 14 May 2023: இன்றைய தலைப்பு செய்திகள்… திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல் சிஎஸ்கே மேட்ச் வரை!

தமிழ்நாடு

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 14 பேர் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.முதல்வரின் முதன்மை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ், நிதித்துறை செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ், உள்துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக மணிவாசன், பொதுப்பணித்துறை செயலாளராக சந்திரமோகன், மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக நந்தகுமார், போக்குவரத்துறை செயலாளராக பணீந்தர் ரெட்டி, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக ஜெகந்நாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையராக மைதிலி ராஜேந்திரன், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் கே.கோபால், பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை இயக்குநராக கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. மேலும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டமும் நடக்கிறது.வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையில் இன்று நண்பகல் அதி தீவிர புயலாக மோக்கா கரையை கடக்கிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.விழுப்புரம் அடுத்த மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த மூன்று பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக அமரன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 42 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

கர்நாடகா மாநிலத்தில் 136 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை உடன் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. இன்று மாலை பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.சித்தராமையா அல்லது டிகே சிவக்குமார் ஆகிய இருவரில் யார் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் என இன்று மாலை முடிவு செய்யப்படுகிறது.இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் சிறப்பு டூடுல் வெளியிட்டு கூகுள் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

வர்த்தகம்

சென்னையில் 358வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இன்று சென்னை – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது எளிதாகி விடும் என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.