வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப்பிரிவின் 562 வது காலாட் பிரிகேட் படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் வவுனியா, பெரியவளையன்கட்டு, சின்னவளையன்கட்டுப் பாடசாலையில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த 40 மாணவர்களுக்கு பாடசாலைக் காலணிகள் வழங்கப்பட்டன.
இராணுவத்தின் முயற்சிக்கு பதிலளிக்கும் வகையில், 562 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜேஎம்ஏ ஜயசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, டிஎம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆர்எம் பத்திராஜா இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினார்.
15 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஏஎம்டீஎஸ் திலகரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், செவ்வாய்க்கிழமை (மே 09) பெரியவளையன்கட்டு 562 வது காலாட் பிரிகேட் தலைமையகத்திற்கு அந்த 40 வறிய மாணவர்களை வரவழைத்து காலணிகளை வழங்கினர்.
அனுசரணையாளர்கள், 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்ஜிபீஎம் காரியவசம் ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.