தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முக்கண்ணன் என்பவர் ஆர்டிஓ ஆக இருந்த பொழுது அலுவலகத்தில் வைத்தே அவருக்கு மாலை மலர்களிடம் அணிவித்து பூக்கள் தூவி குருக்கள் பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட சர்ச்சையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு கும்பகோணத்திற்கு என தனி ஆர்டிஓ நியமனம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் கபிலன் என்பவருக்கும் இடைத்தரகர்களுக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கும்பகோணம் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த போஸ்டரில் “ஊழல் பண மழையில் குடந்தை ஆர்டிஓ அலுவலகம். யார் உண்மையான இன்ஸ்பெக்டர் செந்தாமரையா/ அலுவலக உதவியாளர் கபிலனா. லஞ்சத்தில் கொழிக்கும் அலுவலக உதவியாளர் கபிலன்.. (மாத வசூல் 5 லட்சத்திற்கு மேல் OAக்கு மட்டும்) அனைத்து வாகன உரிமையாளர்களின் ரத்தத்தை லஞ்சமாக குடிக்கும் கபிலன்.
நடவடிக்கை எடுக்குமா லஞ்ச ஒழிப்பு? நடவடிக்கை எடுக்குமா வருமானவரித்துறை? நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? என கும்பகோணம் நகரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.