இராணுவத்தின் சட்ட பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் ஆர்டீஓ பத்திரனகே அவர்களின் தலைமையில் நன்கொடையாளர்கள் குழு வழங்கிய அனுசரணையில் மொனராகலை கோனகனர பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கான நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், மொனராகலை கோனகனர கனிஷ்ட பாடசாலையின் 310 மாணவர்களுக்கு பாடசாலை எழுதுபொருட்கள் மற்றும் கற்றல் உபகரணம் (9) விநியோகிக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவின் 121 வது காலாட் பிரிகேடின் 20 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர், கோனகனர பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் இன்றி மக்கள் பாதிக்கப்பட்டிருந்தமையை, கருத்திற் கொண்டு பொதுத் நலத்திட்டமாக நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவினர்.
மொனராகலை கோனகனர கனிஷ்ட பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது, நன்கொடையாளர்கள் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்ததுடன், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 310 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை விநியோகித்தனர். மேலும், சில குடும்பங்களுக்கு தேயிலை நாற்றுக்களையும் விநியோகித்தனர்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ, 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, 121 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்ஏஜேஎல்வீ உடுவிட்ட, அனுசரணையாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.