நாட்டில் மரக்கறிகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலைகள் இவ்வாறு மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேவையான அளவு மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்காமையினால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாரியளவில் குறைந்துள்ள உற்பத்தி
எவ்வாறிருப்பினும் மரக்கறிகளின் விலையானது மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த எப்ரல் மாதம் அதிகளவிலான மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்கப்பெற்றமையினால் விலையானது குறைவடைந்து காணப்பட்டது.
எனினும், இம்மாதம் மரக்கறிகளின் உற்பத்தி பாரியளவில் குறைவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிிவக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW |