இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2023 மே 14 (இன்று) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வலுவடைந்த ஆழஉhய’ என்ற மிக மிகப் பாரிய சூறாவளியானது நேற்று, 2023 மே 13ஆம் திகதி 23.30 மணிக்கு வட அகலாங்கு 17.90 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 91.00 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது. அது வடக்கு – வடகிழக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியானது (இன்று) மே 14ஆம் திகதி நண்பகலளவில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியான்மார் கரைகளை கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வட அகலாங்குகள் 05N இற்கும்20N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 83E இற்கும் 100E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், கடலில் பயணம் செய்வோர் மற்றும் மீனவ சமூகம் இவ்விடயம் தொடர்பாகவும். வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாகவம் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும், அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.