10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!!

ஐசிஎஸ்ஐ பாடத்தின் கீழ் பயிலும் 10, 12ஆம் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (ஐசிஎஸ்இ) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் சிரமமின்றி results.cisce.org என்ற இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

செல்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்தியாவில் அரசு துறையும், அரசுசாராத் துறையும் பொதுக்கல்வியை வழங்கி வருகின்றன.

அந்த வகையில், அரசு சாராத் துறையான ஐசிஎஸ்இ, நாட்டின் தனியார் கல்வி பாடசாலைகளை கட்டுப்படுத்தி மதிப்பீடு செய்து வருகிறது. இதன்கீழ், நூற்றுக்கணக்கான பாடசாலைகள் இணைந்துள்ளன.

இந்த சபை, ஆண்டுதோறும் மேல்நிலை வகுப்புத் தேர்வுகளையும் (the Indian School Certificate (ISC -Class XII Examination), உயர்நிலை வகுப்புத் தேர்வுகளையும் (The Indian Certificate of Secondary Education (ICSE – Class X Examination) நடத்துகிறது.

பத்தாம் வகுப்பிற்கு பிப்ரவரி 27 முதல் மார்ச் 29 வரை தேர்வுகள் நடைபெற்றது. 12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 13 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.

12ஆம் வகுப்பில் 98,305 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 95,483 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 96.93 சதவீதம். அதேபோன்று, 10ஆம் வகுப்பில் 98.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.