இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அஜித் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கின்றார் என அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. என்னதான் இந்த தகவல் கடந்த ஜனவரி மாதமே இணையத்தில் கசிந்தாலும் தற்போது தான் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே வேகத்தில் தன் அடுத்த படத்தில் நடிக்கலாம் என அஜித் இருக்க எதிர்பாராத விதமாக பல குளறுபிடிகள் நடந்து விட்டன. இருந்தாலும் தற்போது எல்லாம் சரியாகி ஒருவழியாக மே மாதம் இறுதியில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை படக்குழு துவங்கவுள்ளது.
Leo: விஜய்யிடம் பிரபல நடிகரை பற்றி புகார் சொன்ன லோகேஷ்..கலாய்த்து தள்ளிய தளபதி..!
தற்போது தான் அஜித் நேபாளத்தில் தன் பைக் சுற்றுலாவை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். விரைவில் மகிழ் திருமேனியிடம் அஜித் முழு கதையையும் கேட்டுவிட்டு படப்பிடிப்பை துவங்கலாம் என க்ரீன் சிக்னல் தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் அஜித் பைக் சுற்றுலா சென்றிருந்த சமயத்தில் லொகேஷன் வேலைகள் மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு என ஈடுப்பட்டு வந்துள்ளார் மகிழ் திருமேனி. இதையடுத்து லொகேஷன் எல்லாம் செட் ஆகா நாயகி தேர்வு மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பாலிவுட் நாயகிகள் உட்பட பலருடன் மகிழ் திருமேனி பேச்சுவார்த்தை நடத்தி வர அநேகமாக த்ரிஷாவே விடாமுயற்சி படத்தில் நாயகியாக நடிப்பார் என தெரிகின்றது.
ஏற்கனவே அஜித்துடன் இணைந்து பல படங்களில் நடித்த த்ரிஷா விடாமுயற்சி படத்தின் மூலம் மீண்டும் அஜித்துடன் இணைந்தால் நன்றாகவே இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. இந்நிலையில் சமீபகாலமாக அஜித் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கிலேயே வலம் வருகின்றார்.
என்னதான் அந்த லுக் செம மாஸாக இருந்தாலும் ரசிகர்கள் அஜித்தை புது விதமாக பார்க்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். துணிவு படத்தில் என்னதான் அஜித் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் நடித்திருந்தாலும் அந்த லுக் வித்யாசமாக இருந்தது. எனவே அதைப்போல விடாமுயற்சி படத்திலும் அஜித் வித்யாசமான புது லுக்கில் தோன்றுவார் என தகவல்கள் வருகின்றன.
குறிப்பாக இப்படத்தில் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் வராமல் நார்மலான லுக்கிலேயே அஜித் தோன்றுவார் எனவும் பேசப்பட்டு வருகின்றது. பொதுவாக மகிழ் திருமேனியின் படங்கள் என்றாலே செம கிளாஸாக இருக்கும். நடிகர் மற்றும் நடிகைகளும் செம கிளாஸான லுக்கில் காட்சியளிப்பார்கள்.
எனவே அஜித்தையும் விடாமுயற்சி படத்தில் செம கிளாஸாக காண்பிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை மே மாதம் துவங்கி நவம்பர் மாதத்திற்குள் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இப்படத்தை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியிடவும் படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.