Fake seat belt clips banned – போலி சீட் பெல்ட் கிளிப் விற்பனைக்கு தடை விதிப்பு

ஆன்லைன் வர்த்தக தளங்களில் போலி சீட் பெல்ட் கிளிப், சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது. இந்தியாவில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்த போது நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2021 ஆம் ஆண்டில் 16,000க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக (MoRTH) தரவுகளில் தெரிய வந்துள்ளது.

Fake Seat Belt Clips

குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களில் அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள, சீட் பெல்ட் பயன்படுத்தாமல் பயணிக்கும் பொழுது எச்சரிக்கும் அலாரத்தை வாகன உற்பத்தியாளர்கள் நிறுவியுள்ளனர்.

பல ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இருக்கை பட்டை அணிவதனை தவிர்த்து வருவதுடன், பலர் இதனை மோசமாக்கும் வகையில், வாகனத்தின் அலாரம் அமைப்பிற்கு போலி தகவலை வழங்க சீட் பெல்ட் கிளிப்பு அல்லது சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் ஆகியவற்றை இ-காமர்ஸ் தளங்களில் வாங்கி பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA-Central Consumer Protection Authority) வெளியிட்டுள்ள உத்தரவுகளின்படி, இந்தியாவின் முன்னணி ஐந்து இ-காமர்ஸ் தளங்கள் அதன் நுகர்வோரின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பை கேள்விகுறியாக்கும் அனைத்து சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களின் விற்பனையை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த போலி சீட் பெல்ட் கிளிப்களின் விற்பனையானது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 நேரடியாக மீறுவதாகும்.

இதன் விளைவாக, இந்த வர்த்தக தளங்களில் பட்டியலிடப்பட்டிருந்த சுமார் 13,118 போலி சீட் பெல்ட் அல்லது சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.

சீட் பெல்ட் கிளிப் அல்லது அலாரம் ஸ்டாப்பர் பயன்படுத்திய வாகனங்கள் விபத்தில் சிக்கினால் மோட்டார் வாகன காப்பீடு உரிமை கோருபவர் அலட்சியமாக இருப்பதாக கருதி, காப்பீட்டு கோரிக்கைகளை நிறுவனம் மறுக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.