விழுப்புரத்தை உலுக்கிய கோர சம்பவம்.. 88 சாராய வியாபாரிகள் கைது..!! தமிழக காவல்துறை அதிரடி..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 4 பேர் உயிரிழந்ததால் வலி எண்ணிக்கை 7ஆக தற்பொழுது உயர்ந்துள்ளது.

சிலரின்உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், கள்ளச்சாராய விற்பனைய ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் 22 பேர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 226 லிட்டர் சாராயம், 517 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் சாராய விற்பனை குறித்தும், மது கடத்தல் குறித்தும் 74188 46100 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என கடலூர் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.