ராஜமஹேந்திரவரம் : ஆந்திராவில் காக்கிநாடா மாவட்டத்தின் தல்லாரேவு சாலையில் நேற்று மாலை, 14 பெண்களுடன் ஆட்டோ ஒன்று ஏனாம் நோக்கி சென்றது. அப்போது எதிர்திசையில் வேகமாக வந்த தனியார் பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஆட்டோவில் பயணித்த ஆறு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர், மருத்துவமனையில் பலியானார். போலீசார், தனியார் பஸ்சின் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், ஆட்டோவில் பயணித்த 14 பேரும் ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் அனைவரும் காக்கிநாடா மாவட்டத்தின் கோரிங்காவில் உள்ள இறால் பண்னையில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement