குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பல்துறை அபிவிருத்தி உதவியாளர்கள் 740 பேருக்கு தென் மாகாண அரச சேவையில் கனிஷ்ட தரத்தில் நிரந்தர பதவிக்காக நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் நேற்று (14) தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் விலி. டபிள்யு. கமகே தலைமையில் தென் மாகாண பிரதான செயலக அலுவலகத்தின் கேட்போர் கூடம் மற்றும் மாகாண அலுவலக லபுதுவ ‘தக்ஷினபாய’ வில் இடம்பெற்றது.
தென் மாகாண சபையில் இரண்டு வருடங்கள் பயிற்சிக் காலத்தை நிறைவு செய்த சாரதி, அலுவலக பணி மற்றும் சுகாதார பணி உதவியாளர்கள், காவலாளிகள் போன்ற பதவிகளுக்காக இந்த ஊழியர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் போது தென் மாகாண பிரதான செயலாளர் சுமித் அலஹகோன், ஆளுநரின் செயலாளர் தீபிகா குணரத்ன, தென் மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் கிறிஷாந்த மஹேந்திர உட்பட தென் மாகாண சபையின் சகல அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயலாளர்கள், உதவிப் பிரதான செயலாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் புதிய நியமனம் பெறுபவர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.