For the next 3 days, avoid exposure to the sun while roasting..! | அடுத்த 3 நாள் வறுத்து எடுக்கப்போகுது வெயிலு… வெளியே தலை காட்டுவதை தவிருங்க…!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: தென் மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:

தென் மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வெப்ப அலை வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

latest tamil news

தமிழகம் முழுவதும் நேற்று (மே 14) 13 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது. அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. ஈரோடு, கரூர், வேலூர், சேலம், தர்மபுரி, மதுரை, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

வெயில் சதம் அடித்த விபரங்கள் பின்வருமாறு:

latest tamil news

நேற்று (மே 14) கரூர் பரமத்தி 104 டிகிரி, திருத்தணி 103.64 டிகிரி, மதுரை விமான நிலையம் 103.64 டிகிரி, மதுரை நகரம் 102.92 டிகிரி, ஈரோடு 102.92 டிகிரியாக பதிவாகி இருந்தது. திருச்சி 102.74 டிகிரி, தஞ்சாவூர் 102.2 டிகிரி, கடலூர் 101.12 டிகிரி, நாகப்பட்டினம் 100.76 டிகிரி, பரங்கிப்பேட்டை 100.58 டிகிரி என 13 இடங்களில் வெயில் சதத்தை கடந்தது. மேலும் புதுச்சேரியில் 101.84 டிகிரி வெயில் பதிவானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.