மெலடி முதல் கானா வரை அனைத்து விதமான ஜானரிலும் தமிழ்,மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் இசையமைத்து வருகிறார். பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
மே 15, 1983 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்த இவர் பி.இ கம்பியூட்டர் சைன்ஸ் படித்திருக்கிறார். 2012 ஆம் ஆண்டு வெளியான `அட்டக்கத்தி’ படத்திற்கு இசையமைத்து அனைவரின் மனதைக் கவர்ந்தவர்.
பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றால் ஒரு தனி அறையில் அமர்ந்து இசை அமைப்பார்கள். ஆனால் இவருக்கு இந்த இடத்தில் உட்கார்ந்து சிந்தித்தால் தான் ட்யூன் வரும் என்றெல்லாம் கிடையாதாம். எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சிந்தித்து இசையமைப்பது ச.நா ஸ்டைல்!
`ஏ சண்டகாரா’, `இறைவி’ பி.ஜி.எம் எல்லாம் பாடலாசிரியர் விவேக் வீட்டில் குழந்தைகள் பயன்படுத்தும் கீபோர்டை வைத்துதான் இசையமைத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை இசைக்கும் இடத்துக்கும் எந்த சம்மதமும் இல்லை.
அவரின் மனைவியிடம் கேஷுவலாக பேசிக்கொண்டே வீட்டிலிருக்கும் பியானோவை வைத்து ஏதாவது வாசித்துக்கொண்டே இருப்பாராம். அப்போது சில புதிய ட்யூன்கள் க்ளிக் ஆக, `ஹே சூப்பர்ல!’ என்று தன் கணவரின் இசையை பாராட்டுவாராம் மீனாட்சி.
அவரைத் தவிர மற்ற இடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வாராம். சாலையில் இருக்கும் குப்பைகளைக்கூடப் பார்த்த உடனே சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவாராம்.
ஆரம்பத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்த சந்தோஷ் நாராயணன் பத்து வருடமாக அந்த வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடிகூட இல்லாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்.
தன் பாடல் வெளிவந்தால் மக்களிடம் இருந்து என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்று அவரின் மனைவி கவலைப்படும் அளவிற்குகூட கவலைப்படாமல் நார்மலாகத்தான் இருப்பாராம்.
கிரிக்கெட் பிரியரான சந்தோஷ், தன் நண்பர்களுடன் தினமும் கிரிக்கெட் விளையாட சென்று தன் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வார்.
தான் வளர்ந்தால் மட்டும் போதாது என்று எண்ணி, இசைத்துறையில் கால்பதிக்க விரும்பும் இளம் இசை கலைஞர்களுக்கும் தன் ஸ்டூடியோவில் வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
இதுவரை 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து தனக்கென்று இசைத்துறையில் தனி ஒரு இடம்பிடித்த சந்தோஷ் நாராயணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.