நைரோபி : கென்யாவில் ஏற்பட்டுள்ள வறட்சியால், உணவு தேடி ஊருக்குள் வந்த, 11 சிங்கங்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான, கென்யாவில் கிளிமாஞ்சாரோ என்ற, மலை பிரதேசம் மிகவும் பிரபலமானது. இதன் அருகில் உள்ள கஜியோடு கவுன்டி பகுதிக்கு உட்பட்ட பகுதியில், யுனஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட, அம்போசெலி உயிர்சூழல் மண்டலம் அமைந்துள்ளது.
கென்யாவில் கடந்த, 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால், உணவு தேடி விலங்குகள், வனத்தை விட்டு வெளியே வருவதும், அப்போது, மனித-விலங்குகள் மோதல் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது.
சில தினங்களுக்கு முன், அந்நாட்டின் மிக வயது முதிர்ந்த சிங்கங்களில் ஒன்றான லுான்கிட்டோ, 19 வனப்பகுதியை விட்டு வெளியே வந்து, உணவு தேடி, கால்நடை வளர்க்கும் பகுதிக்குள் சென்றது.
அதை, கவனித்த கால்நடை உரிமையாளர் சிங்கத்தை சுட்டுக் கொன்றுள்ளார். இதுபோல், கடந்த சனிக்கிழமை 11 சிங்கங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் வனத்துறை தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement