பாலியல் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்களுக்கு பாஜகவை சேர்ந்த ஒரு பெண் எம்.பி கூட ஆதரவு தெரிவிக்கவில்லை என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியு மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீராங்கனை தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பிரிஜ் பிரிஜ் பூஷன் சிங் மீது புகார் கொடுத்த 7 வீராங்கனைகளிடம் போலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஆசிய போட்டிகளில் தங்க பதக்கம் வென்றவரும் மல்யுத்த வீரர்களை போராட்டத்தில் முன்னிலையில் இருக்கும் வீராங்கனையுமான வினேஷ் போகத் ஒன்றிய பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற எம்.பி ஒருவர் கூட, மல்யுத்த வீரர் வீராங்கனைகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.
newstm.in