தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
அதன்படி, சென்னை – 105.44 டிகிரி, புதுச்சேரி- 102.92 டிகிரி, திருத்தணி – 105.8 டிகிரி, கரூர் பரமத்தி – 104.9 டிகிரி, பரங்கிப்பேட்டை – 104.36 டிகிரி, ஈரோடு – 103.64 டிகிரி, மதுரை விமான நிலையம் – 103.28 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
திருச்சி – 103.1 டிகிரி, கடலூர் – 102.92 டிகிரி, மதுரை – தஞ்சை தலா 102.2 டிகிரி, பாளையங்கோட்டை – 102.02 டிகிரி, நாமக்கல் – சேலம் தலா 100.4 டிகிரி, நாகை – 100.04 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட வெயில் வாட்டி வதைக்கும்” என்று தெரிவித்திருந்தது.
மேலும், நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.