புதுடில்லி,உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் ஓய்வு பெற்ற நிலையில், இங்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக எம்.ஆர்.ஷா, 2018ம் ஆண்டு நவ., 2ல் பொறுப்பேற்றார். இந்நிலையில், நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார். இதையொட்டி, புதுடில்லியில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கான பிரிவு உபசார விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:
நீதிபதி எம்.ஆர்.ஷாவின் அறிவார்ந்த நடைமுறையும், சிறந்த அறிவுரைகளும், கொலீஜியம் நடவடிக்கைகளில் எனக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தன. தொழில்நுட்பங்களை எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றலுடைய இவர், போராட்ட குணம் உடையவர் என்பதால், இவரை, ‘டைகர் ஷா’ என அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு நீதிபதியான தினேஷ் மகேஸ்வரியும் ஓய்வு பெற்றார். இதனால் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 லிருந்து, 32ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement