Ameer – ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு.. திரும்ப பெறுங்கள் – அமீர் வலியுறுத்தல்

சென்னை: Ameer (அமீர்) நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் என இயக்குநர் அமீர் வலியுறுத்தியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்தவர் நெல்சன் வெங்கடேசன். அவரது இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஃபர்ஹானா’. இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

எதிர்ப்பும், போலீஸ் பாதுகாப்பும்: ஃபர்ஹானா ட்ரெய்லர் வெளியானதை அடுத்து இஸ்லாமியர்களை புண்படுத்தும் நோக்கில் படமாக்கப்பட்டுள்ளதாக ஒரு தர்ப்பினர் கடும் எதிர்ப்பை முன்வைத்தனர். அப்படி எந்த காட்சியும் படத்தில் இல்லை என படக்குழு தொடர்ந்து சொன்னது. ஆனால், படத்தை வெளியிடக்கூடாது என்ற எதிர்ப்பும் ஒரு பக்கம் வலுத்துக்கொண்டே சென்றது. இருப்பினும் தடைகளை தாண்டி கடந்த வெள்ளிக்கிழமை படம் ரிலீஸானது,. படத்துக்கு ரசிகர்கள் ஓரளவு டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீடு, இயக்குநர் நெல்சன் வீடு, தயாரிப்பு அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர். இது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் என இயக்குநர் அமீர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

Director Ameera Urges on withdrawing the police protection provided to actress Aishwarya Rajeshs house

வருத்தம் தருகிறது: இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பர்ஹானா’ படம் குறித்து ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களும் அந்தப்படத்தை எதிர்ப்பது போல் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.

இஸ்லாமிய மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ? என்ற நோக்கில் அவரது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கு செய்தி உண்மையிலே எனக்கு வருத்தம் தருவதாக இருக்கிறது. இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தி மத வேற்றுமையை உருவாக்கும் ஒரே நோக்கத்தில் தயாரிக்கப்பட ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தையும் ‘பர்ஹானா’ படத்தையும் ஒரே கோணத்தில் பார்க்கும் அளவிற்கு தமிழர்களும் இஸ்லாமியர்களும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை.

Director Ameera Urges on withdrawing the police protection provided to actress Aishwarya Rajeshs house

தனிப்பட்ட முறையில் தெரியும்: ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும் என்பதாலும், அவருக்கு இஸ்லாமியர்கள் மீது அன்பும், மரியாதையும் இருப்பதை நான் உணர்ந்திருப்பதாலும் இஸ்லாமிய கோட்பாடுகளை இழிவுபடுத்தும் உள்நோக்கத்தோடு இந்தப் படத்தில் நடித்திருப்பார் என்பதையும், தீய நோக்கத்தோடு இப்படத்தை தயாரிப்பு நிறுவனம் எடுத்திருக்கும் என்பதையும் நான் நம்பவில்லை.

வாபஸ் பெறுங்கள்: எனவே, இஸ்லாமிய கதாபாத்திரங்கள் உள்ள எல்லா படத்துக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தை ஒரு சகிப்புத் தன்மை இல்லாத சமூகமாக சித்தரிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் காவல்துறையின் பாதுகாப்பை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.