இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு பேட்டரி ஸ்வாப் நுட்பத்திற்கு முக்கியத்துவம் பெற்ற மாடல்களில் ஹீரோ விடா , பவுன்ஸ் இன்ஃபினிட்டி , சிம்பிள் ஒன் ஆகிய மூன்று மாடல்கள் உள்ளன.
பேட்டரி மாற்றுதல் (Battery Swapping) நுட்பம் என்றால் என்ன ?
பேட்டரி ஸ்வாப்பிங் (Battery Swapping) அல்லது பேட்டரியை மாற்றுவது என்பது பேட்டரி மூலம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு ஸ்வாப் நிலையங்களில் தீர்ந்துபோன பேட்டரிகளை கொடுத்து முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை நிமிடத்தில் மாற்றுவதற்கு அனுமதிக்கின்றது.
இந்திய சந்தையில் பவுன்ஸ் ஸ்வாப்அப், கோகோரோ நிறுவனம், யூமா எனெர்ஜி, ஹோண்டா மொபைல் பவர் பேக் e ஆகிய நிறுவனங்கள் துவக்கநிலையில் சில நகரங்களில் வழங்கி வருகின்றது.
மற்றபடி, போர்டெபிள் வகையில் பல்வேறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கிடைத்து வருகின்றது. ஹீரோ எலக்ட்ரிக், ஒகினவா, உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால் இதற்கான பேட்டரி ஸ்வாப்பிங் மையங்களை துவங்குவது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.
Hero Vida V1
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா பேட்டரி ஸ்வாப் நுட்பம் கொண்ட மாடலாகும். இந்த பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை கொண்டே சமீபத்தில் 24 மணி நேரத்தில் 1780 கிமீ கடந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. ஹீரோ விடா கோகோரோ நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி ஸ்வாப் சேவையை வரும் காலத்தில் கொண்டு வரவுள்ளது.
Vida Specification | V1 Plus | V1 Pro |
Battery pack | 3.44 kWh | 3.94 kWh |
Top Speed | 80 Km/h | 80 Km/h |
Range (IDC claimed) | 143 km | 165 km |
Real Driving Range | 85 km | 95 km |
Riding modes | Sport, Ride, Eco | Sport, Ride, Eco, Custom |
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் கிடைக்கின்ற Vida V1 Plus ₹ 1,28,350 மற்றும் Vida V1 pro ₹ 1,48,824 ஆன்-ரோடு விலை ஆகும்.
Bounce Infinity e1
அடுத்து பவுன்ஸ் நிறுவனம் பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை முதன்முதலில் இந்தியாவுக்கு அறிமுகம் செய்து தனது இன்ஃபினிட்டி.e1 ஸ்கூட்டர் மாடலை விற்பனை செய்து வருகின்றது. இந்த மாடல் 1.5 Kw பவரை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 65Km/hr வேகத்தை வழங்குகின்றது.
Bounce Specification | infinity e1 |
Battery pack | 1.9 kWh |
Top Speed | 65 Km/h |
Range (IDC claimed) | 85 km |
Real Driving Range | 70 km |
Riding modes | Eco, Power, Drag |
பவுன்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பேட்டரி இல்லாமல் அல்லது பேட்டரியுடன் என இருவிதமாக வாங்கலாம். பேட்டரி உள்ள இன்ஃபினிட்டி ஆன்-ரோடு விலை ₹ 97,500 ஆகும். பேட்டரி இல்லாத மாடல்கள் ஸ்வாப் நிலையங்களில் மாற்றும் வகையில் வழங்கப்படுகின்றது.
Simple One
வரும் மே 23 ஆம் தேதி வெளியாக உள்ள சிம்பிள் ஒன் ஸ்கூட்டரி பேட்டரி ஸ்வாப் மற்றும் ஃபிக்ஸ்டு என இரண்டும் வரவுள்ளது. இதனுடைய ரேஞ்சு 236 கிமீ என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முழுமையான விபரங்கள் விற்பனைக்கு பிறகு தெரிய வரும்.
Simple Specification | Simple one |
Battery pack | 4.5 kWh |
Top Speed | 105 Km/h |
Range (IDC claimed) | 236 km |
Real Driving Range | 150 km |
Riding modes | Eco, Power, |
இனிவரும் நாட்களில் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் உட்பட பல்வேறு மாடல்களில் பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பம் இடம்பெற உள்ளது.
Yulu Wynn
தனிநபர் பயன்பாட்டிற்கு யூலூ வின் (Yulu Wynn) எலக்ட்ரிக் மாடலில் பேட்டரி ஸ்வாப் நுட்பம் உள்ளது. ஸ்கூட்டரின் ரேஞ்சு அதிகபட்சமாக 60 கிமீ வரை வழங்கும்.
Wynn Specification | Yulu Wynn |
Battery pack | 51W,19.3 Ah LFP |
Top Speed | 24.9 km/h |
Range (claimed) | 68 km |
Riding modes | – |
யூலு வின் ஸ்கூட்டர் விலை ரூ.59,999 ஆக கிடைக்கும். லைசென்ஸ், வாகனப்பதிவு அவசியமில்லை.