Moto Edge 40 ஸ்மார்ட்போன் மே 23 இந்தியாவில் வெளியாகும்! IP68 பாதுகாப்பு கொண்ட 5G போன்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் அடுத்த பிரீமியம் போனாக Motorola Edge 40 ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பு சமீபத்தில் ட்விட்டர் மூலம் வெளியானது. இந்த போனில் முதல் முறையாக Mediatek Dimensity Chip இடம்பெறும்.

இதுவரை Qualcomm Snapdragon சிப் மட்டுமே பயன்படுத்திவந்த மோட்டோரோலா நிறுவனம் தற்போது முதல் முறையாக Mediatek Dimensity சிப் பயன்படுத்துகிறது. மேலும் உலகிலேயே மிகவும் மெலிதான IP68 பாதுகாப்பு உள்ள போன் என்றும் அழைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறப்போகும் சில முக்கிய அம்சங்களை பற்றி காணலாம்.
டிஸ்பிளேஇந்த போன் ஒரு 6.55 இன்ச் 3D Curved pOLED டிஸ்பிளே வசதி, 144HZ refresh rate, 1200 nits பிரைட்னஸ், HDR10+, 100% DCI P3 Color Gamut, InDisplay Fingerprint சென்சார் வசதி போன்றவை இடம்பெற்றுள்ளன. இதன் கட்டமைப்பு முழுக்க முழுக்க அலுமினியம் மற்றும் பிரீமியம் Vegan Leather கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கேமரா வசதிகள்முக்கிய கேமரா வசதியாக இதில் 50MP OIS கேமரா,13MP அல்ட்ரா வைட் கேமரா, மைக்ரோ லென்ஸ் கேமரா போன்றவை இடம்பெறும். மேலும் இதில் முன்பக்கம் 32MP செல்பி கேமரா, 360 டிகிரி Horizon Stabilization Lock மற்றும் Ultra pixel technology வசதி இதில் இடம்பெறும்.
​திறன் வசதிகள்முதல் முறையாக இந்த போனில் Mediatek Dimensity 8020 சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் 8GB RAM, 256GB ஸ்டோரேஜ் உள்ளது. இதில் 15 விதமான 5G பேண்ட் வசதி, WiFi 6E, Bluetooth 3.0, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதி, Dolby Atmos வசதி உள்ளது.
பேட்டரி வசதிகள்இதில் 44000mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் 68W வயர் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது.
​விலை எதிர்பார்ப்புகள் (Motorola Edge 40 Price)இதில் மூன்று விதமான Eclipse Black, Nebula Green, Lunar Blue கலர் ஆப்ஷன்கள் கிடைக்கும். இதன் விலை 50 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வரும் மே 23 அன்று வெளியாகிறது. இது Flipkart மூலம் விற்பனை செய்யப்படும்.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.