லாகூர்: ”அரசியல் நடவடிக்கை களில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தான் ராணுவம் வெட்கப்பட வேண்டும்,” என, அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.
நம் அண்டை நாடான பாக்., ராணுவத்தின் மக்கள் தொடர்பு அமைப்பின் இயக்குனர் மேஜர் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, ‘நயவஞ்சகர்’ என, சமீபத்தில் விமர்சித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இம்ரான் கான் நேற்று கூறியதாவது:
சர்வதேச அளவில், பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி, நற்பெயரை நான் சம்பாதித்த போது, அகமது ஷெரீப் சவுத்ரி பிறக்கவே இல்லை. என்னை, ராணுவ விரோதி என அழைத்ததற்காக, அவர் வெட்கப்பட வேண்டும். பாக்., ராணுவத்திற்கு அரசியல் எதற்கு? அதற்கு பதில், அரசியல் கட்சியை துவங்கிடாலாமே? அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றம் எனக்கு ஜாமின் அளித்தது. ஆனால், ராணுவத்தின் உதவியோடு, பாக்., அரசு கொல்லைப்புறமாக என்னை கைது செய்தது.
தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தால், ஆட்சியில் உள்ளவர்கள் தேர்தலை நடத்த விடாமல் சதி செய்கின்றனர். தேர்தல் நடக்கும் போது, நாட்டு மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement