Best Selling Sedan In April: கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். செடான் கார்களின் விற்பனை சரிவைக் காட்டும் அதே வேளையில், மக்கள் மத்தியில் எஸ்யூவி -கள் அதிகம் பிரபலமடைந்து வருகின்றன. சந்தையில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் செடான் கார்களைப் பற்றி பேசுகையில், கேப் அக்ரிகேட்டர்ஸின் விருப்பமான மாருதி சுஸுகி டிசையர் முன்னணியில் உள்ளது. மாருதி சுஸுகி டிசையர் ஏப்ரல் மாதத்தில் செடான் பிரிவில் அதிக விற்பனை செய்துள்ளது.
இருப்பினும், மாருதி சுஸுகி டிசையரின் விற்பனை ஆண்டு அடிப்படையில் 5 சதவீதம் குறைந்துள்ளது. இதுமட்டுமின்றி அதிகம் விற்பனையாகும் டாப்-5 செடான் கார்களில் 3 கார்கள் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளன.
Maruti Suzuki Dzire
மாருதி சுஸுகி டிசையர் ஏப்ரல் 2023 இல் 10,132 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மேலும் ஏப்ரல் 2022 இல் 10,701 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, விற்பனையில் 5% சரிவு (ஆண்டு அடிப்படையில்) ஏற்பட்டுள்ளது.
Hyundai Aura
ஹூண்டாய் ஆரா ஏப்ரல் 2023 இல் 5,085 யூனிட்களை விற்றுள்ளது. மேலும் ஏப்ரல் 2022 இல் 4,035 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. அதாவது, விற்பனையில் (ஆண்டு அடிப்படையில்) 26% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
Honda Amaze
ஏப்ரல் 2023 இல் ஹோண்டா அமேஸ் 3,393 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மேலும் ஏப்ரல் 2022 இல் 4,467 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. அதாவது, விற்பனையில் 24% சரிவு (ஆண்டு அடிப்படையில்) காணப்படுகின்றது.
Tata Tigor
டாடா டிகோர் ஏப்ரல் 2023 இல் 3,154 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மேலும் ஏப்ரல் 2022 இல் 3,803 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, விற்பனையில் 17% சரிவு (ஆண்டு அடிப்படையில் ஏற்பட்டுள்ளது.
Maruti Ciaz
மாருதி சியாஸ் ஏப்ரல் 2023 இல் 1,017 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மேலும் ஏப்ரல் 2022 இல் 579 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, விற்பனையில் (ஆண்டு அடிப்படையில்) 76% அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது.
மாருதி சுஸுகி டிசையர் இந்தியாவில் அதிக மைலேஜ் தரக்கூடிய சிஎன்ஜி கார்களில் ஒன்றாகும். இது 31km/kg மைலேஜ் அளிக்கின்றது. டிசையர் வாகனத்தில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கிடைக்கிறது. இதனுடன் இதில் சிஎன்ஜி விருப்பமும் கிடைக்கிறது. இந்த இன்ஜின் பெட்ரோலில் 89 பிஎச்பி பவரையும், சிஎன்ஜி முறையில் 76 பிஎச்பி/98 என்எம் ஆற்றலையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்
உங்களிடம் கார் அல்லது பைக் இருந்தால், நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனை ஒன்று உள்ளது. இது அடிக்கடி வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்வதுண்டு. வாகனங்களின் டயர்கள் விரைவாக தேய்ந்து போவதாக மக்கள் பலமுறை புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், வாகனத்தின் டயர்கள் தேய்ந்து கிடப்பதற்குப் பின்னால், அந்த நிறுவனத்தை விட வாகன உரிமையாளரின் அலட்சியமே பெரிய காரணமாக உள்ளது. இதுமட்டுமின்றி, வாகனத்தின் டயர்கள் தேய்மானம் அடைந்தால், சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. டயர் தேய்மானத்தைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்.
– டயர் அழுத்தத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்
– அவ்வப்போது டயர்களை மாற்றவும்
– டயர் சீலண்டை பயன்படுத்துங்கள்
– எப்போது கார் டயர்களை மாற்றுவது சரி?