இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை திணைக்களம் இணைந்து 14ஆம் திகதி காலை மேற்கொண்ட விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, பேருவளை கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 15 கிலோமீட்டர்) தொலைவில், இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணத்தினால் ஏற்பட்ட கடல் நீர் கசிவு காரணமாக மூழ்கும் அபாயத்தில் இருந்த மீன்பிடி படகொன்றில் இருந்த ஆறு மீனவர்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான ஊபு 208 படகு மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதன்படி, கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு பல நாள் மீன்பிடிப் படகின் உரிமையாளர் செய்த அறிவித்தலின்படி, கடற்படை உடனடியாகச் செயற்பட்டு இலங்கை கடலோர காவல்படை திணைக்களத்திற்கு சொந்தமான படகின் மூலம், மூழ்கும் அபாயத்தில் இருந்த படகில் உயிர் ஆபத்தில் இருந்த ஆறு (06) மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளது.