மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற போட்டோக்களை ஷேர் செய்த நிலையில், அவர்கள் இருவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பைக்கை ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசத்தை அணிந்து செல்ல வேண்டும் என்கிற விதி உள்ளது.
ஆனால், சமீபத்தில் அமிதாப் பச்சன் மற்றும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் அதனை கடைபிடிக்கவில்லை.
அமிதாப் பச்சனுக்கு லிப்ட்: தனது பிரம்மாண்ட சொகுசு காரை விட்டு விட்டு மும்பை டிராபிக்கை சமாளிக்க முடியாமல் யாரென்றே அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற அனுபவத்தை அமிதாப் பச்சன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு அந்த மஞ்சள் டிசர்ட் போட்ட நபருக்கு நன்றியை கூறி இருந்தார்.
அந்த போட்டோக்கள் அதிகமாக ஷேர் செய்யப்பட்ட நிலையில், அதில், அமிதாப் பச்சனோ பைக்கை ஓட்டிக் கொண்டு சென்ற அந்த நபர் என இருவருமே ஹெல்மெட் அணிந்து செல்லவில்லை.
அமிதாப் பச்சனுக்கு அபராதம்: இந்த விவகாரத்தை மும்பை போலீஸுக்கு நெட்டிசன்கள் ட்வீட் மூலம் கொண்டு சென்ற நிலையில், அதனை பார்த்த மும்பை போலீஸார் டிராபிக் போலீஸாருக்கு தெரிவித்து விட்டோம். சம்பந்தப்பட்ட நடிகருக்கும் அந்த பைக்கை ஓட்டிச் சென்றவருக்கும் அதற்கான அபராதம் விதிக்கப்படும் என்று கூறி உள்ளனர்.
அனுஷ்கா ஷர்மாவும் ஹெல்மெட் போடல: சில நாட்களுக்கு முன்னதாக நடிகை அனுஷ்கா ஷர்மாவும் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பின.
தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பிசினஸ்களை கவனித்து வரும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தனது ஊழியர் ஒருவர் பைக்கில் அமர்ந்துக் கொண்டு மும்பை டிராபிக்கை சமாளிக்க பைக்கில் சென்றுள்ளார்.
அந்த போட்டோக்களையும் எடுத்துப் போட்டு நெட்டிசன்கள் அனுஷ்கா ஷர்மாவும் அவரது ஊழியரும் ஹெல்மெட் அணியவில்லை என புகார் அளிக்க அவர்களுக்கு உரிய தண்டனையும் வழங்கப்படும் என மும்பை டிராபிக் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், வண்டி ஓட்டுபவரின் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யும் நிலைமையும் அதிகபட்சமாக சிறைத் தண்டனை வரை எக்ஸ்ட்ரீம் கேஸ்களில் நடக்கும் என்கின்றனர்.