வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பெயரை கேட்டாலே என்னா ஸ்பீடு? ஃப்ளைட்ல போற மாதிரி இருக்காமே? எல்லாம் லேட்டஸ்ட் டெக்னால்ஜியாம். இப்படியான பேச்சை தான் கேட்க முடிகிறது. இது பிரதமர் மோடியின் கனவு திட்டம் என்று பாஜகவினரால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையையும் பிரதமர் மோடியே நேரில் சென்று தொடங்கி வைத்து வருகிறார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை
தற்போது வரை 15 வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. வரும் 18ஆம் தேதி ஹௌரா – பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 12வது வந்தே பாரத் சேவையாக செகந்திராபாத் டூ திருப்பதி ரயில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
வழித்தடமும், பயண நேரமும்
செவ்வாய் கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்களும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 661 கிலோமீட்டர் தூரத்தை 8 மணி நேரம் 15 நிமிடங்களில் கடந்து விடுகிறது. வழியில் நல்கொண்டா, குண்டூர், ஒங்கோலே, நெல்லூர் என நான்கு ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. சராசரியாக 80 கிலோமீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகத்திலும் இந்த ரயில் பயணிக்கும்.
பயணிகள் கோரிக்கை
தொடக்கத்தில் 530 இருக்கைகள் உடன் 8 பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டது. இதையடுத்து கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் 16 பெட்டிகள் சேர்க்கப்பட்டு 1,128 இருக்கைகள் உடன் தற்போது இயக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேரத்தில் மாற்றம்
இந்த சூழலில் தென் மத்திய ரயில்வேயின் தலைமை செய்தி தொடர்பாளர் ராகேஷ் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், செகந்திராபாத் டூ திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தனது பயண தூரத்தை 15 நிமிடங்கள் முன்கூட்டியே கடந்துவிடும். அதற்கேற்ப வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (மே 17) முதல் அமலுக்கு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நேர அட்டவணை
ரயில் நிலையங்கள்வந்து சேரும் நேரம் / புறப்படும் நேரம்செகந்திராபாத்6.15நல்கொண்டா7.29 / 7.30குண்டூர்9.35 / 9.40ஓங்கோலே11.12 / 11.15நெல்லூர்12.29 / 12.30திருப்பதி14.30
ரயில் நிலையங்கள்வந்து சேரும் நேரம் / புறப்படும் நேரம்திருப்பதி15.15நெல்லூர்16.49 / 16.50ஓங்கோலே18.02 / 18.05குண்டூர்19.45 / 19.50நல்கொண்டா21.49 / 21.50செகந்திராபாத்23.30