12ஆம் வகுப்பு முடித்த மாணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்த சரவணன் – ஊஞ்சம்மன் தம்பதியின் மகன் கமலேஸ்வரன் (18) அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று +2 தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற பிறகு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் பூதிப்புரம் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் கமலேந்திரன் சடலமாக கண்டறியப்பட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கமலேந்திரனின் தாய் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த கமலேஸ்வரன் பள்ளியில் உடன் படித்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
காதல் விவகாரம் தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் கமலேஸ்வரனை ஏற்கனவே எச்சரித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாணவியின் உறவினர்களை அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கமலேஸ்வரனின் செல்போன் தொடர்புகளின் அடிப்படையிலும் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in