Union Minister Nitin Gadkari receives death threat | மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல்

புதுடில்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. நேற்று(மே 15) மாலை, டில்லியில் உள்ள இவரது வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக கட்கரியின் அலுவலகம் டில்லி போலீசுக்கு தகவல் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.