BSNL-ன் அற்புதமான திட்டம்! 100Mbps இணைய வேகம் மற்றும் ஒரு வருடத்திற்கு இலவச OTT..!

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு மட்டுமின்றி பல பிராட்பேண்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் குறைந்த விலையில் பல சிறந்த நன்மைகளுடன் வருகின்றன. அவற்றில் குறைந்த விலையில் அதிக பலன்களை கொண்டிருக்கும் ஒரு   BSNL FTTH திட்டத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். இந்த திட்டத்தின் விலை ரூ.799. இதில் இலவச வரம்பற்ற அழைப்பு, OTT சந்தா, டேட்டா மற்றும் பல நன்மைகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

பிஎஸ்என்எல் ரூ.799திட்டம்
 
இந்த திட்டத்தில், எந்த நெட்வொர்க்கிலும் 24 மணிநேரத்திற்கு இலவச வரம்பற்ற அழைப்பின் பலனைப் பெறுவீர்கள். இணைய வேகம் 100Mbps வேகத்தில் வரம்பற்று கிடைக்கும். திட்டத்தில் 1000ஜிபி டேட்டா கிடைக்கும். அதே நேரத்தில், டேட்டா முடிந்த பிறகும், 5Mbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

இலவச ஓடிடி

Hotstar Super, Lions Gate, Shemaroo, Hungama, SonyLIV, Zee5, Voot மற்றும் YuppTV ஆகியவற்றின் இலவச சந்தா பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

யாருக்கு சிறந்தது?

BSNL இன் இந்த திட்டம் சிறிய அலுவலகத்தை நடத்தும் பயனர்களுக்கும், ஒரே செலவில் இணையம், அழைப்புகள் மற்றும் OTT ஆகியவற்றை பெற நினைப்பவர்கள் இந்த திட்டத்தைத் தேர்தெடுக்கலாம். பிஎஸ்என்எல்லின் இந்த 100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டத்தைப் போலவே, தனியார் டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் அதே விலையில் சற்றே கூடுதல் நன்மைகளைத் தரும் ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது. அதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

ஏர்டெல்லின் ரூ.799 திட்டம்

ஏர்டெல்லின் ரூ.799 திட்டத்தில் 100Mbps வேகத்தில் இணையம் கிடைக்கிறது. இத்திட்டத்தில் மொத்தம் 3.3TB டேட்டா வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வின்க் மியூசிக், ஷா அகாடமி, அப்பல்லோ 24/7 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவற்றிற்கு சந்தாக்கள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி அன்லிமிடெட் லோக்கல்-எஸ்டிடி அழைப்பு வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

 BSNL சிறந்தது ஏன்?

ஏர்டெல் திட்டத்தில் அதிக டேட்டா கிடைக்கும். ஆனால், இந்த திட்டத்தில் BSNL வழங்கும் OTT நன்மைகள் இல்லை. தரவுகளுடன் OTT பயன்பாடுகளின் சந்தாவை நீங்கள் விரும்பினால், BSNL திட்டம் உங்களுக்கு சிறந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.