தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது ரிலீசாகியுள்ள படம் ‘பர்ஹானா’. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ள இந்தப்படத்தில் ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டிஸ் பிரபகாரன் இசையமைத்துள்ள இந்தப்படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்களில் வெளியானது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘பர்ஹானா’ படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியுள்ளதாக சர்ச்சைகள் எழுந்தது. இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் ஒருசில இயக்கங்கள் போர்க்கொடி தூக்கினர். ஆனால் இந்தப்படத்தில் இஸ்லாமியர்களை எங்கும் இழிவுபடுத்தவில்லை என படக்குழுவினர் விளக்கம் அளித்தனர். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியாகியுள்ள ‘பர்ஹானா’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
Vijay: விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி இணைந்தது எப்படி.?: பிரபலம் பகிர்ந்த தகவல்.!
மேலும் இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியில் இந்தப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் புரமோஷனில் தெலுங்கு சினிமா குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், எனக்கு தெலுங்கு திரையுலகம் ரொம்ப பிடிக்கும். கம்பேக் கொடுக்க ஒரு நல்ல படம் அமைய வேண்டும்.
விஜய தேவரகொண்டாவுடன் நான் இணைந்து நடித்து வெளியான ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் மீண்டும் தெலுங்கில் நடிப்பேன். ‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு பொருத்தமாக அமையும் என நினைக்கிறேன். ராஷ்மிகா மந்தனா அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் நான் இன்னும் அந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பாக பொருந்தியிருப்பேன் என பேசியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
John Kokken: சினிமாவில் வில்லன்.. ஆனால் என் மகனுக்கு: எமோஷனலான ‘சார்பட்டா வேம்புலி’..!