புதுடெல்லி: இந்திய சந்தையில் லாவா ‘அக்னி 2 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த 2021-ல் லாவா அக்னி 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா அக்னி 2 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.78-இன்ச் முழு-எச்டி+ டிஸ்ப்ளே
- 3டி ட்யூயல் கர்வ்டு டிசைனை கொண்டுள்ளது டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் டிமன்சிட்டி 7050 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- ஆண்ட்ராய்டு 14 மற்றும் 15 அப்கிரேடுக்கு லாவா உறுதி அளித்துள்ளது
- 50 + 8 + 2 + 2 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேரமா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்
- 4,700mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி நெட்வொர்க்
- வரும் 24-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ள இந்த போனின் விலை ரூ.21,999
- விலையில் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
Introducing AGNI 2: India’s Fiery Performer
Sale Starts 24th May, 10 AM
Special Offer Price ₹19,999/-Only on Amazon: https://t.co/NzTxy8cd74
*T&C Apply
Flat ₹2000 off on all major bank’s credit/debit cards and EMI transactions.#AGNI2 #LavaMobiles #ProudlyIndian pic.twitter.com/w1IPjzL9nM