முதல் மனைவியை பிரிந்தபோது மனஅழுத்தத்தில் இருந்தேன்: ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்


முன்னாள் மல்யுத்த வீரரும், நடிகருமான டுவைன் ஜான்சன் தனது முதல் மனைவியை பிரிந்த பின்னர் மன அழுத்தத்தில் இருந்ததாக மனம் திறந்துள்ளார்.

மல்யுத்த சூப்பர் ஸ்டார்

WWE சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அமெரிக்க நடிகர் டுவைன் ஜான்சன். தி ராக் எனும் பெயரால் மல்யுத்த விளையாட்டில் (WWE) மிரட்டிய இவர், பின்னர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

தி மம்மி ரிட்டன்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் படவரிசையில் இணைந்த பின்னர் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

டுவைன் ஜான்சன் தற்போது இரண்டாவது மனைவி லாரென் ஹஷின் உடன் வாழ்ந்து வரும் நிலையில், முதல் மனைவி குறித்து மனம் திறந்துள்ளார்.

மனைவியுடன் விவாகரத்து

டேனி கார்சியா என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜான்சன், 10 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் 2007ஆம் ஆண்டில் அவரைப் பிரிந்தார்.

அதன் பின்னர் மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் தற்போது கூறியுள்ளது, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஏனெனில், கட்டுமஸ்தான உடல்வாகுடன் மல்யுத்த விளையாட்டில் எதிரியை துவைத்து எடுக்கும் ராக் மன அழுத்தத்திற்கு ஆளானவர் என்பது தான் காரணம்.

டுவைன் ஜான்சன்/Dwayne Johnson Getty Images

மனம் திறந்த ராக்

51 வயதாகும் ராக், முதல் மனைவியை விவகாரத்து செய்தது குறித்து கூறுகையில், ‘என்னை சோதிக்க வரக்கூடிய எந்த மன வலியையும் சமாளிக்க, உணர்ச்சிகரமான கருவியைப் பெற நான் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்தேன்.

ஆண்களாகிய நாங்கள் அதைப் பற்றி பேசவில்லை. நாங்கள் தலையைக் குனிந்து கொண்டு தான் வேலை செய்தோம். ஆரோக்கியமாக இல்லை, ஆனால் இது எங்களுக்கு தெரிந்தது.

உங்கள் சொந்த மன ஆரோக்கியம் மன நரகமாக மாறினால், நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விடயம் யாரிடமாவது பேச வேண்டும்.

ஒருவரிடம் பேசக்கூடிய தைரியம் உங்களுக்கு இருந்தால் அது தான் உங்கள் பலம்.

விவகாரத்திற்கு பிறகு மன அழுத்தத்துடன் போராடினேன். மனநலத்துடன் மல்யுத்தம் செய்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு சில நண்பர்கள் இருந்தனர்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர், தனது 15 வயதில் தாயின் தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து அதிர்ச்சியை உணர்ந்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.