சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில், சிறுவயதில் இருந்தே சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது என்றும் கூறியுள்ளது. உடல் எடையைக் கட்டுப்படுத்த அல்லது தொற்று நோய் அல்லாத பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்க செயற்கை இனிப்புகளை பயன்படுத்துவது குறித்து WHO நடத்திய ஆய்வில் அடிப்படையில், செயற்கை இனிப்புகளான அஸ்பார்டேம், அசெசல்பேம் கே, சைக்லேமேட்ஸ், நியோடேம், சாக்கரின், சுக்ராலோஸ், […]