அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் பாடசாலை மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் மூவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை மாணவரின் துப்பாக்கிச்சூடு
தென்மேற்கு மாகாணமான நியூ மெக்ஸிகோவில் உள்ள பல வீடுகளில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். அதில் இருவர் பொலிஸார் என தெரிய வந்துள்ளது. பியூ வில்சன் (18) என்ற பாடசாலை மாணவரே இந்த தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அத்துடன் அவர் பல ஆயுதங்களை வைத்திருந்துள்ளார்.
மாணவரை நோக்கி பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் பலியானதாக கூறப்படுகிறது.
வயதான பெண்கள் பலி
இந்த சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், அதில் 90 வயது தாய் மற்றும் அவரது 70 வயது மகள் அடங்குவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும், சந்தேக நபருக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேயர் இரங்கல்
பொலிஸார் நடத்திய விசாரணையில், குறித்த மாணவர் பயன்படுத்திய 3துப்பாக்கிகளின் ஒன்றை நவம்பர் மாதம் வாங்கியுள்ளார். அவர் எப்படி வாங்கினார் என தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
துயர் சம்பவம் குறித்து ஃபார்மிங்டன் மேயர் நேட் டக்கெட், ‘மூன்று அப்பாவி குடிமக்களின் உயிர்களைக் கொன்று, பலரைக் காயப்படுத்திய கொடூரமான சோகம் இது. வன்முறைச் செயல் எங்களை வேதனையிலும், அவநம்பிக்கையிலும் தள்ளிவிட்டது’ என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
AP