அம்மா உணவகம் – புதிய மாற்றம்: ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்! மக்களுக்கு ஷாக்கா சர்ப்ரைஸா?

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மலிவு விலையில் உணவு வழங்கும் இந்த திட்டத்தை பிற மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றன. திமுக ஆட்சியமைத்ததற்கு பின்னால் அம்மா உணவகம் திட்டம் (amma canteens) தொடர்ந்து செயல்படுத்தப்படுமா, விரிவாக்கம் செய்யப்படுமா என்று கேள்விகள் எழுந்தன.

அம்மா உணவகம் திட்டம் விரிவாக்கமா?ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் முந்தையவர்கள் கொண்டு வரும் திட்டங்கள் நிறுத்தப்படலாம், அல்லது பெயர் மாற்றப்படலாம் என்று கூறப்படுவது உண்டு. ஆனால் அம்மா உணவகம் அதே பெயரில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதே சமயம் நிதி நிலைமையை காரணம் காட்டி இத்திட்டம் விரிவுபடுத்தப்படவில்லை. சில இடங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
கருத்துக் கணிப்பு!அம்மா உணவகம் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் பசியாறுவதால் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும் மக்களின் எண்ணத்திற்கேற்ப புதிய மாற்றங்களை கொண்டு வரவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு உட்கொள்பவர்களில் சுமார் இரண்டு லட்சம் பேரிடம் கருத்துக் கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்மா உணவகம் – உணவு பட்டியலில் மாற்றம்!அதன்படி அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவு திருப்தியளிக்கிறதா, வேறு புதிய உணவுகளை அறிமுகப்படுத்தலாமா, விலை உயர்வு செய்யலாமா என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு பதிலை பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் மதிய உணவுகளில் மாற்றம் கொண்டு வரலாம் என்று கூறியுள்ளதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மலிவு விலையில் தேநீர் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்!மக்களை பாதிக்காத வகையில் சிறிது விலையேற்றம் செய்யலாம் என்றும் கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனராம். இந்த முடிவுகள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் மாற்றங்கள் அமலுக்கு வரலாம் என்றும், சென்னையைத் தொடர்ந்து மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படலாம் என்கிறார்கள்.
அம்மா உணவகம் – விலையேற்றம் உறுதி!​​இது குறித்து மேலும் விசாரிக்கையில், “நிதிப் பிரச்சினை தொடர்ந்து நிலவுகிறது. சிறப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியவில்லை. அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த உணவுகளின் விலை ஏற்றம் அவசியம் என அரசு நினைக்கிறது. அதனாலே விலையேற்றத்தோடு உணவுப் பட்டியலில் சில மாற்றங்களையும் கொண்டு வந்தால் எதிர்ப்பு கிளம்பாது. அத்துடன் கருத்துக் கணிப்பு நடத்தி மக்களின் எண்ணவோட்டத்தின் படியே விலையை உயர்த்தியுள்ளோம் என்று கூறவும் வாய்ப்பு உள்ளது” என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.