இளவரசி கேட் முதல், ராஜ குடும்பத்துடன் தொடர்புடைய பெண்களுக்கு நூற்றுக்கணக்கான மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்ததாக, வழக்கு ஒன்று தொடர்பில் சாட்சியமளித்த இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனம் ஒன்றின்மீது பகீர் குற்றச்சாட்டு
இளவரசர் ஹரி, தனது தனியுரிமையில் தலையிட்டதாக Mirror Group Newspapers (MGN) மீது வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அது தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
அப்போது, Daily Mirror ஊடகத்தின் சார்பில் தங்களது தனிப்பட்ட விடயங்கள் குறித்து சட்டவிரோதமாக அறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஹரி தெரிவித்தார்.
313 சந்தேகத்துக்குரிய தொலைபேசி அழைப்புகள்
2003க்கும் 2011க்கும் இடையில், இளவரசி கேட், இளவரசி டயானாவின் தாயாகிய Frances Shand Kydd மற்றும் தன் முன்னாள் காதலியாகிய செல்சி டேவி (Chelsy Davy) உட்பட தனது குடும்பத்தினர், நண்பர்களுக்கு, 313 சந்தேகத்துக்குரிய தொலைபேசி அழைப்புகள் வந்ததாகத் தெரிவித்துள்ளார் ஹரி.
ஹரியின் முன்னாள் காதலி மற்றும் அவரது குடும்பத்திற்கு வந்த தொலைபேசி அழைப்புகளால் அதீத அழுத்தத்திற்குள்ளான செல்சி, நமக்கு ராஜ குடும்பமே ஒத்துவராது என முடிவு செய்ததாகவும், அதனால், தானும் பெரும் மன அழுத்தத்திற்குள்ளானதாகவும் ஹரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தான் யாரைக் காதலித்தாலும் சரி, அல்லது காதலிப்பதாக வதந்திகள் வெளியானாலும் சரி, உடனடியாக Daily Mirror குழும ஊடகவியலாளர்கள் அவர்களை தேவையில்லாமல் வம்புக்கிழுத்து பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார் ஹரி.