முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பலருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வுத்தரவு இன்று (17.05.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மே 09 போராட்டம்
2022 மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஞ்சனா ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |