வெறும் துண்டோடு பொலிஸ் நிலையம் வந்த சிறுவன்! மாற்றாந்தாயின் மீது அவன் அளித்த புகார்


இந்திய மாநிலம் ஆந்திராவில் சிறுவன் ஒருவன் சட்டை ஏதும் அணியாமல்,  தனது மாற்றாந்தாய் மீது புகார் அளிக்க வந்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

துண்டோடு வந்த சிறுவன்

ஆந்திர மாநிலம் கோட்டபேட் பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற சிறுவன், சட்டை ஏதும் அணியாமல் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

வெறும் துண்டோடு பொலிஸ் நிலையம் வந்த சிறுவன்! மாற்றாந்தாயின் மீது அவன் அளித்த புகார் | Andhra Boy Approaches Police Stepmother Beating@google

அப்போது அங்கிருந்த பொலிஸார் சிறுவனிடம் விசாரிக்கும் போது, தனது தாய் தனக்கு பிடித்த சட்டையை போட விடாமல் தடுத்ததாகவும், அதனை எதிர்த்து கேட்டதற்காக தன்னை அடித்து சித்திரவதை செய்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

சிறுவனின் வித்தியாசமான இந்த புகாரை கேட்ட பொலிஸார் சிறுவனது பெற்றோரை அழைத்து விசாரித்துள்ளனர்.

மாற்றாந்தாயின் சித்திரவதை

விசாரணையில் தினேஷ் என்ற சிறுவனின் தாய் சில வருடங்களுக்கு முன் இறந்து விட, அவனது தந்தை  இரண்டாவதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது.

வெறும் துண்டோடு பொலிஸ் நிலையம் வந்த சிறுவன்! மாற்றாந்தாயின் மீது அவன் அளித்த புகார் | Andhra Boy Approaches Police Stepmother Beating@gettyimages

இதனிடையே தினேஷை அவனது மாற்றாந்தாய் அடிக்கடி அடித்து சித்திரவதை படுத்துவதாக தெரிகிறது. இந்நிலையில் தினேஷ் தனது நண்பனது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு, தயார் ஆகி கொண்டிருக்கும் போது வெள்ளை சட்டை ஒன்றை எடுத்து போட்டிருக்கிறார்.

அதனை பார்த்த அவனது மாற்றாந்தாய் அந்த சட்டையை போடாதே என தடுத்துள்ளார். ஆனால் தினேஷ் அதை தான் போடுவேன் என அடம்பிடித்துள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த மாற்றாந்தாய் சிறுவனை சரமாரியாக அடித்துள்ளார்.

வெறும் துண்டோடு பொலிஸ் நிலையம் வந்த சிறுவன்! மாற்றாந்தாயின் மீது அவன் அளித்த புகார் | Andhra Boy Approaches Police Stepmother Beating@toi

பின்னர் சிறுவன் குளித்து முடித்த கையோடு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு, பொலிஸ் நிலையம் வந்து புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பொலிஸார் தினேஷின் பெற்றோரை அழைத்து, இருவருக்கும் அறிவுரை கூறி இனிமேல் இது போல நடந்து கொள்ள கூடாதென கண்டித்து அனுப்பியுள்ளனர்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.