ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டே சுத்திகரிக்கப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா ஏற்றுமதி செய்துவருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, அதிலிருந்து தயாரிக்கப்படும் டீசலை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருவதாக பிரசெல்ஸ் மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் ஜோசப் போரல் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், ரஷ்ய கச்சா எண்ணெய் வேறொரு நாட்டில் சுத்திகரிக்கப்படும்போது, அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை ரஷ்யா உடையதாக கருத முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகக்குறைவாகவே ரஷ்ய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாக முன்பொருமுறை ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.