தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளுக்கு மழை கிடைக்கும். நாட்டின் 80 சதவீத மழை இந்த பருவமழை காலத்தில்தான் கிடைக்கும். கேரளா முதல் வட இந்தியாவின் பல மாநிலங்கள் நல்ல மழை பொழிவை பெறும். கோடை காலத்தை ஓட்டி தொடங்கும் மழை என்பதாலும் அதிக மழை பொழிவை கொடுக்கும் என்பதாலும் தென்மேற்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு அதிகம்.
அந்தமான் பகுதிகளில் தொடங்கும் பருவமழை படிப்படியாக கேரளா, கர்நாடகா, கோவா, மத்தியப்பிரதேசம் என பரவும். வழக்கமாக தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் அல்லது ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும்.
Bhavani Sre: விடுதலை பட ஹீரோயினா இது… க்யூட் லுக்கில் பவானிஸ்ரீ!
இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது. அதாவது தென்மேற்கு பருவ மழை வரும் ஜூன் 4ஆம் தேதி அல்லது 7 ஆம் தேதிதான் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் தென்மேற்கு பருவமழைக்கான் அறிகுறிகள் தெற்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் தென்பட்டால் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் மழை இயல்பான அளவிலேயே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஹீட் ஸ்ட்ரெஸ்… தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளில் இல்லாத வெயில்… காரணம் இதுதான்!
பசிபிக் பெருங்கடலில் 2 முதல் 7 ஆண்டுகள் இடைவெளியில் உருவாகும் எல்நினோ மாற்றம் இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 80 சதவீதமாக உயரும் என்றும் ஆனால் இதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.