வவுனியா மாவட்டத்தில் பிரதான பயிராக பயிரிடப்படும் எள் பயிர்ச்செய்கையில் இம்முறை அதிக விளைச்சலைப் பெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
தற்போது எள் பயிர்ச்செய்கையின் அறுவடை ஆரம்பமாகியுள்ளதுடன் சந்தையில் எள்ளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கிட்டத்தட்ட 16000 ஏக்கர்களில் எள் பயிரிடப்பட்டுள்ளது. சந்தையில் ஒரு கிலோ எள்ளின் விலை 800 – 1000 ரூபாய் வரை உள்ளது. இதனால் எள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இம்முறை அதிக பொருளாதார நன்மை கிடைத்துள்ளது.
தற்போது மாவட்டத்தில் எள் அறுவடை நடைபெற்று வருகிற நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் சிறுபோகத்தில் நெல் சாகுபடி செய்யப்படாத பகுதிகளில் கூடுதல் பயிராக எள் பயிரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.