வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது விவகாரத்தில் சர்ச்சை அதிகாரிக்கு சி.பி.ஐ. இன்று (17ம் தேதி) சம்மன் அனுப்பியுள்ளது.
மஹாராஷ்டிராவில் 2021-ம ஆண்டு அக்டோபரில் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோரை, என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை அப்போதைய மும்பை மண்டல என்.சி.பி., இயக்குனராக இருந்த சமீர் வான்கடே என்ற அதிகாரி விசாரணை நடத்தி வந்தார்.
இதில் ஆர்யன் கானை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமெனில் ரூ. 50 லட்சம் லஞ்சமாக கேட்டதாக சமீர் வான்கடே மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் டில்லி தலைமை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு பின் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். வழக்கு வேறு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் சி.பி.ஐ. தூசிதட்டி மறு விசாரணையை துவக்கியது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் சமீர் வாகன்கடே இல்லம், அலுவலங்களில் சி.பி.ஐ.,ரெய்டு நடத்தியது. இதில் சிக்கிய ஆவணங்களின் படி சமீர் வான்கடே மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நாளை (மே.18) மும்பை சி.பி.ஐ, அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சமீர் வான்கடேவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement