ரஜினிகாந்தின் 170ஆவது படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது அவரது மகள் இயக்கும் லால் சலாம் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இந்த படங்களைத் தொடர்ந்து ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.
இந் நிலையில் ரஜினிகாந்த் – ஞானவேல் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுபாஷ்கரன் விக்ரமிடம் நேரடியாக பேசி சம்மதம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், நடிகர் விக்ரமுக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
newstm.in