வெற்றிலைக்கேணியில் கவனிக்கப்படாத பாதை படையினரால் சீரமைப்பு

553 வது காலாட் பிரிகேட்டின், 12 (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 10வது களப் பொறியியல் படையணி படையினர் இணைந்து வெற்றிலைக்கேணிக்கும் முள்ளியனுக்கு இடையிலான பாழடைந்த பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவ் வீதி பொதுமக்கள் மற்றும் படையினர் தமது நிர்வாக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதால் 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜிஎஸ்கே பெரேரா ஆர்எஸ்பீ அவர்களால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் பாதை பல ஆண்டுகளாக சீரமைக்காமல் காணப்பட்ட நிலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

சில நாட்களில் படையினரால் பள்ளங்கள் நிரப்பப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இப் பாதை வடமராட்சி – கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பழமை வாய்ந்த முள்ளியன் கோவில் ஊடாக வெற்றிலைக்கேணியில் இருந்து இயக்கச்சி ஏ9 வீதி வரை இந்து பக்தர்களிடையே பிரபலமாக காணப்படுகிறது.

இப்பணி 30 ஏப்ரல் 2023 நிறைவுசெய்யப்பட்டது. 553 காலாட் பிரிகேட், 12 (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 10 வது களப் பொறியியல் படையினர், பல இந்து மதகுருமார்கள் மற்றும் பொதுமக்களும் புதுப்பிக்கப்பட்ட பாதையை மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். பொதுமக்களும் படையினரும் இணைந்து சமூகத் திட்டமாக பாதையின் இருபுறங்களையும் சுத்தப்படுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.