சோலி முடிஞ்சு.. ரஷ்ய அதிபரின் அதிரடி முடிவு.. சொந்த நாட்டு அதிகாரிகளே கதிகலங்கும் நிலை.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அரசு அதிகாரிகள் பணியில் இருந்து விலகினால் தேசத் துரோகமாக அறிவிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

நேட்டோ அணியில் உக்ரைன் இணையவிருப்பதாக சம்மதம் தெரிவித்த கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. ஒராண்டுக்கு மேல் நடைபெற்று வரும் போரில் இருதரப்பில் இருந்தும் வீரர்கள், பொதுமக்கள் மடிந்து வருகின்றனர். அமெரிக்காவின் ஏகாதிபத்திய வெறியால் இந்த போர் தொடர்ந்து நீடித்து வருவதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

அமெரிக்கா தலைமையில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படைகள், ரஷ்யாவின் எல்லையில் அதாவது உக்ரைனில் நிலை நிறுத்தப்படுவதை ரஷ்யா விரும்பவில்லை. பல முறை கூறிய பின்னரும் கேட்காததால் இந்த போரை ரஷ்யா தொடங்கியது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் மறைமுக போரில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநாடுகள் நேரடியாக ரஷ்யாவை எதிர்த்து போர் செய்யாமல், உக்ரைனுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி வருவதால் போர் நீடித்து வருகிறது. அதேபோல் போர் விளைவால் உக்ரைன் குழந்தைகளை ரஷ்யா கடத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், ரஷ்ய அதிபரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு வந்த அன்று இரவே ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சென்றார்.

இந்த போரில் ரஷ்யா தோற்க நேரிடும் சூழலில், எங்கள் நாடு கடைசி முயற்சியாக அணு ஆயுதங்களை கொண்டு தாக்க நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கூலிப்படையான வாக்னர் குழுவை களத்தில் இறக்கியுள்ளது ரஷ்யா.

போர்ர் எப்போது முடியும் என்று தெரியாதநிலையில், அதிகாரிகள் பணியில் இருந்து விலகினால் அவர்கள் குற்ற வழக்குகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச புலனாய்வு இதழில் வெளியான செய்தியில் இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Palestine Crisis : பாலஸ்தீனத்தில் பரிதாபம்: ரத்தம்.. உயிரிழப்பு.. ‘இப்ப உணவுக்கும் கட்’.. கைவிரித்த உலக நிறுவனம்.!

போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசு அதிகாரிகள் பணியில் இருந்து விலகினால் அது நாட்டிற்கு செய்யப்படும் துரோகமாக கருதப்படும். எனவே கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக இல்லாமல் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெயர் கூற விரும்பாத அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். அதேபோல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு படை, முன்னனி பாதுகாப்பு படை அதிகாரிகள் தங்களது பணிக் காலம் முடிந்தாலும் ஓய்வு வழங்கப்பட மாட்டாது என ரஷ்ய அதிபர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.