2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் – Hero Xpulse 200 4V on-road Price in Tamilnadu

ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள மேம்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான எக்ஸ்பல்ஸ் 200 4V அட்வென்ச்சர் பைக்கில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

2023 Hero XPulse 200 4V

இந்தியாவின் சிறத்த ஆஃப்ரோடு அனுபவத்தை வழங்கும் பட்ஜெட் விலை மோட்டார்சைக்கிள் ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்பல்ஸ் 200 4வி மாடலாகும். முந்தைய மாடலை விட சிறப்பான மேம்பாடுகளை பெற்றதாக வந்துள்ள பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ரோடு, ஆஃப்ரோடு மற்றும் ரேலி என மூன்று ரைடிங் மோடுகள், 230 சதவீத கூடுதல் ஒளி வழங்கும் உயர்தர எல்இடி ஹெட்லைட், பல்வேறு பாகங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய வகையிலான பாடி கிராபிக்ஸ் கவனத்தை பெறுகின்றது.

முன்பாக ஆஃப் ரோடு சாகசங்களுக்கு என பிரேத்தியேகமாக ரேலி கிட் எடிசன் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட மாடல் தற்பொழுது எக்ஸ்பல்ஸ் 200 4வி புரோ எடிசன் என்ற பெயருடன் வந்துள்ளது.

எக்ஸ்பல்ஸ் 200 4V பைக்கில் ஆயில் கூல்டு 199.6cc பிஎஸ்6 மற்றும் E20 ஆதரவு பெற்ற 4 வால்வுகளை கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 18.8 bhp பவர் 8,500rpm-லும் மற்றும் 17.35 Nm டார்க் 6,500rpm-லும் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக கான்ஸ்டென்ட் மெஸ் கியர்பாக்ஸ்  உள்ளது. முன்புறத்தில் 276 mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220 mm டிஸ்க் பிரேக்குகளுடன், சிங்கிள் சேனல் ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன், 13 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு டேங்க் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 90/90-21 M/C 54S டயர் மற்றும் பின்புறத்தில் 120/80-18 M/C 62S டயரும் கொடுக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பில் 37mm டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 10 ஸ்டெப்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.

எக்ஸ்பல்ஸ் 200 4V பைக்கின் பரிமாணங்கள் 2222 mm நீளம், 862 mm அகலம், 1320 mm உயரம், வீல்பேஸ் 1410 mm மற்றும் இருக்கை உயரம் 825 mm மற்றும் 220 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்று 159 கிலோ எடை கொண்டுள்ளது.

எக்ஸ்பல்ஸ் 200 4V புரோ பைக்கின் (முன்பு ரேலி கிட் எடிஷன்) பரிமாணங்கள் 2255 mm நீளம், 862 mm அகலம், 1380 mm உயரம், வீல்பேஸ் 1427 mm மற்றும் இருக்கை உயரம் 891 mm மற்றும் 270 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்று 161 கிலோ எடை கொண்டுள்ளது.

குறிப்பாக முந்தைய மாடலை விட அட்வென்ச்சர் ஸ்டைல் மாடலில் 60mm வரை விண்ட்ஸ்கீரின் உயர்த்தப்பட்டு, எல்இடி ஹெட்லைட் 230 சதவிதம் வரை அதிகபட்ச வெளிச்சத்துடன், புதிய ஹெட்லேம்ப் லோ பீம், ஹைபீம் மற்றும் ஃபிளாஷர் மூன்று வெவ்வேறு செயல்பாட்டு முறைகளைக் கொண்டிருக்கின்றது. இதற்காக ஹெட்லேம்பினை இயக்க புதுப்பிக்கப்பட்ட சுவிட்ச் கியர் வழங்கப்பட்டுள்ளது. இரு நிற கலவையை கொண்ட பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் ஹேண்ட் நக்கிள் கார்டுகளை பெற்றுள்ளது.

ரைடர் ட்ரைஏங்கிள் அமைப்பில் மாற்றத்தை கொண்டு வந்து 35mm குறைவாக ஃபூட் பெக் வழங்கி இருக்கை அமைப்பில் மாற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரோடு, ஆஃப் ரோடு மற்றும் ரேலி என மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்ற சிங்கிள சேனல் ஏபிஎஸ் கொண்டு வந்துள்ளது. மிக சிறப்பான ஆன்-ரோடு மற்றும் ஆஃப் ரோடு பயண அனுபவத்தை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 வழங்கும்.

முழுமையான டிஜிட்டல் எல்சிடி கிளஸ்ட்டர் கொண்டுள்ள இந்த பைக்கில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி கொண்டு டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியுடன் அமைந்துள்ளது. யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுளது.

hero xpulse 200 4v techno blue

தமிழ்நாட்டில் ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்பல்ஸ் 200 4V பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை XPULSE 200 4V ₹ 1,43,810 மற்றும் XPULSE 200 4V PRO ₹ 1,51,185 ஆகும்.

புதுச்சேரியில் XPULSE 200 4V ₹ 1,43,516 மற்றும் XPULSE 200 4V PRO ₹ 1,50,891

எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கில் மேட் நெக்சஸ் ப்ளூ, டெக்னோ ப்ளூ, பிளாக் ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் புரோ வேரியண்ட் ஆனது புரோ வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கின்றது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V நுட்பவிபரங்கள்

Specification XPULSE 200 4V/XPULSE 200 4V Pro
Engine oil-cooled, 4-stroke, single cylinder OHC 4 Valve Engine
Displacement 199.6 cc
Power 18.9 bhp @ 8500 rpm
Torque 17.35 Nm @ 6500 rpm
Fuel system FI
Transmission 5-speed constant mesh
Suspension (front) Telescopic Front Forks (dia 37) with anti friction bush/  Fully adjustable Telescopic
Suspension (rear) Rectangular swingram with 10 Step Adjustable Monoshock
Brakes (front) 276 mm disc
Brakes (rear) 220 mm disc
Front Tyre 90/90-21 M/C 54S, Tube Type
Rear Tyre 120/80-18 M/C 62S, Tube Type
Fuel tank capacity 13 liters
Kerb weight 159 kg/ 161 Kg
Length 2222 mm / 2255 mm
Width 862 mm
Height 1320 mm/ 1350 mm
Wheelbase 1410 mm/ 1427 mm
Ground clearance 220 mm/ 270 mm
Colors Matte Nexus Blue, Techno Blue, Black Sports Red and Pro White
Features Digital LCD instrument cluster, side-stand with engine cutoff, Bluetooth connect, Turn by Turn Navigation

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V நிறங்கள்

2023 Hero XPulse 200 4V on-Road Price Tamil Nadu

2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4v பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவாடங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

XPULSE 200 4V ₹ 1,69,516

XPULSE 200 4V PRO ₹ 1,78,891

புதுச்சேரி ஆன்-ரோடு விலை XPULSE 200 4V ₹ 1,59,516 மற்றும் XPULSE 200 4V PRO ₹ 1,68,891

Hero XPulse 200 4V Rivals

200cc பிரிவில் நேரடியான அட்வென்ச்சர் பைக்குகள் இல்லையென்றாலும், ஹோண்டா CB 200X, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் எதிர்கொண்டு கூடுதலாக மற்ற 200cc பைக்குகள் , தனது சாகோதரன் எக்ஸ்பல்ஸ் 200T 4V மாடல்களை எதிர்கொள்ளும்.

Faq Hero Xpulse 200 4v

2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி ஆன்-ரோடு சென்னை விலை விபரம் ?

2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் தமிழ்நாடு சென்னை ஆன்-ரோடு விலை XPULSE 200 4V ₹ 1,69,516 மற்றும் XPULSE 200 4V PRO ₹ 1,78,891

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி என்ஜின் பவர் எவ்வளவு ?

ஆயில் கூல்டு 199.6cc பிஎஸ்6 மற்றும் E20 ஆதரவு பெற்ற 4 வால்வுகளை கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 18.8 bhp பவர் 8,500rpm-லும் மற்றும் 17.35 Nm டார்க் 6,500rpm-லும் வழங்குகின்றது.

2023 Hero XPulse 200 4V image gallery

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.